சர்வதேச விமானங்களுக்கு தடை; பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு


புதுடெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டிருக்கிறது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பேருந்து, ரயில், விமானம் உட்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. எனினும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வசதியாக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பொது முடக்ககட்டுப்பாடுகள் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. எனினும், சர்வதேச விமான சேவை மட்டும் இன்னமும் தொடங்கப்படாமல் இருந்தது. அதனை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென ஒமைக்ரான் பரவியதால் மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டிருக்கிறது.

கரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு தடை இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்