புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இது நேற்றைவிட 7 சதவீதம் குறைவு என்பதும், பாசிடிவிட்டி விகிதம் 19.65%ல் இருந்து 14.43% ஆகக் குறைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 76 லட்சத்து 18 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பு 8,891 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைவிட 8.3% அதிகம்.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 17 லட்சத்து 36 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 310 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 86 ஆயிரத்து 761ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் இதுவரை 3 கோடியே 53 லட்சத்து 94 ஆயிரத்து 882 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 158.04 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 14.43% என்றளவில் உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
44 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago