என்எல்சி புதிய மறுவாழ்வு, மீள் குடியேற்றக் கொள்கை வெளியீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கையை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டார்.

என்எல்சி நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்காக இந்த புதிய மறுவாழ்வுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலிக்காட்சி மூலம் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வி. கணேசன் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரகலாத் ஜோஷி பேசியதாவது:

கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் என்எல்சி இந்தியா நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வாய்ப்புக்களை அளிக்கும் மிக இலகுவான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்கிய என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டுகிறேன்.

பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் இழப்பீட்டை இந்த புதிய மறுவாழ்வுக் கொள்கை உறுதி செய்துள்ளது. புதிய கொள்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகள் அதிகளவில் உள்ளன. திறன் இந்தியா திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க தமிழக அரசுடன் என்எல்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. நிலையான வாழ்வாதாரத்திற்கும், ஒவ்வொரு கிராமத்தையும் தற்சார்புடையதாக மாற்றவும் இந்த புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கை வழிவகுக்கும் .

கிராம மக்களுக்கு பயனளிப்பதோடு, என்எல்சி நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த புதிய கொள்கை வழிவகுக்கும்.


இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்