புதுடில்லி: எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எம்ஜிஆரின் திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளை இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவினர் மட்டுமின்றி அவரது எம்ஜிஆரின் ரசிகர்கள் உட்பட பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!
— Narendra Modi (@narendramodi) January 17, 2022
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது:
‘‘பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது.’’
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago