மேற்குவங்கத்தில் கரோனா கட்டுப்பாடுகள் ஜன.31 வரை நீட்டிப்பு: திருமணங்களுக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில தலைமைச் செயலர் துவிவேதி பிறப்பித்துள்ள உத்தரவில், "கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள், தளர்வுகள் என அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 200 பேர் கலந்து கொள்ளலாம் அல்லது திருமண அரங்கின் முழு கொள்ளளவில் பாதி பேர் கலந்து கொள்ளலாம். எது குறைவோ அதன் அடிப்படையில் கலந்து கொள்ளலாம். கண்காட்சிகளில் திறந்த அரங்குகளில் நடத்தலாம். ஆனால் அதற்கு கரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் சுகாதார, சட்டம் ஒழுங்கு துறை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. தவிர அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்கு அனுமதியுண்டு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 85 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 199 பேரும், டெல்லியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்து 6,041 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு நேற்றிரவு 10 மணி முதல் அமலில் உள்ளது. தமிழகத்தில் இன்று இரவு 10 மணிக்குத் தொடங்கும் ஊரடங்கு திங்கள் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்