புதுடெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.68 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.
நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பாசிட்டிவ் 16.66 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் 12.84 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 223 நாட்களில் இல்லாத அளவாக கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 லட்சத்து 17 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில் 3.85 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைவோர் சதவீதம் படிப்படியாகக் குறைந்து 94.83 ஆகச் சரிந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கூடுதலாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 49 லட்சத்து 47 ஆயிரத்து 390 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 85 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 199 பேரும், டெல்லியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்து 6,041 ஆக அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
52 secs ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago