புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2.464லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2 லட்சத்து 64 ஆயிரத்து 202பேர் கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த 239 நாட்களில் இல்லாத அளவு அதிகமாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 3 கோடியே 65 லட்சத்து 82ஆயிரத்து 129ஆக அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 19ம் தேதி 2.76 லட்சம் பேர் கரோனவில் பாதிக்கப்பட்டனர் அதன்பின் அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.
» கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள்; உ.பி.யில் பாஜக ‘காலி’- சரத் பவார் ஆரூடம்
» பாஜகவிலிருந்து 3-வது நாளாக 8-வது எம்எல்ஏ விலகல்: கலக்கத்தில் கட்சித் தலைமை
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 220 நாட்களில் இல்லாத அளவு 12 லட்சத்து 72ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 315 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 85 ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது.
கரோனா ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சைபெறுவோர் 3.48 சதவீதமாக அதிகரித்துவிட்டனர்., குணமடைந்தோர் எண்ணிக்கை 95.20 ஆகச் சரிந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 1,54,542 பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 3,48,24,706 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் அதிகரிக்கும் அதேநேரத்தில் ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பு 5,753 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago