மேற்குவங்க ரயில் விபத்தில் 5 பேர் பலி; 40க்கும் மேற்பட்டோர் காயம்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டம் மைனாகுரி பௌதியில் இன்று மாலை குவாஹாத்தி பிகானர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.
இந்த விபத்தில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 40க்கும் மேற்பட்டோரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் ஜல்பாய்குரி மருத்துவமனையிலும், சிலர் மைனாகுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோசமாக காயமடைந்த 10 பேர் வடக்கு பெங்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றனர்.

இன்றிரவு விபத்துப் பகுதியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்யவுள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் நான் ரயில்வே அமைச்சரிடம் பேசி மேற்குவங்க ரயில் விபத்து தொடர்பாகக் கேட்டறிந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தோருக்கு ரூ.1 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு ரூ.25,000மும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்