இந்தியாவில் 236 நாட்களில் இல்லாத அளவு கரோனா சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு: ஒரேநாளில் 27% கூடிய பாதிப்பு

By ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2.47 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 236 நாட்களில் இல்லாத அளவு அதிகரிப்பாகும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 417பேர் கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த 236 நாட்களில் இல்லாத அளவு அதிகமாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 3 கோடியே 63 லட்சத்து 17ஆயிரத்து 927ஆக அதிகரித்துவிட்டது.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 216 நாட்களில் இல்லாத அளவு அதிகரித்து, 11 லட்சத்து 17ஆயிரத்து 531 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 380 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 85 ஆயிரத்து 35ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் கேரளாவில் 199 பேரும், டெல்லியில் 40 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கரோனா ஒட்டுமொத்த பாதிப்பில் 3.08 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர், குணமடைந்தோர் எண்ணிக்கை 95.99 ஆகச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு மே 21ம் தேதிக்குப் பின், இப்போதுதான் ஒரே நாளில் 2.57 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 1,62,212 பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 3,47,15,361 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் அதிகரிக்கும் அதேநேரத்தில் ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பு 5,488 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 2,162 பேர் ஒமைக்ரானிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,367 பேர், ராஜஸ்தானில் 792, டெல்லியில் 549, கேரளாவில் 486 பேர், கர்நாடகாவில் 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனா தடுப்பூசி 154.61 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்