‘‘சமூக நீதி போராளி தாரா சிங்கிற்கு மனமார்ந்த வரவேற்பு’’- படத்துடன் ட்வீட் செய்த அகிலேஷ்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநில அமைச்சர் தாராசிங் சவுகான் பதவி விலகிய சில நிமிடங்களில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சமூக நீதிக்காகப் போராடிவரும் இடைவிடாத போராளி தாரா சிங் சவுகானுகக்கு மனமார்ந்த வரவேற்பு என பதிவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் அக்கட்சியிலிருந்து நேற்று பதவி விலகினார்.

இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இருந்து இரண்டாவது அமைச்சரான தாரா சிங் சவுகான் விலகியுள்ளார்.

நேற்று சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்து விட்டு அகிலேஷ் யாதவை சந்தித்ததை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி ராஜினாமா அரங்கேறியுள்ளது.

இரண்டு அமைச்சர்களும் பதவி விலகியுடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைபடங்களுடன் ட்வீட் செய்தார்.

இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில் கூறியுள்ளதாவது:

மனமார்ந்த வரவேற்பு! சமூக நீதிக்காகப் போராடிவரும் இடைவிடாத போராளி தாரா சிங் சவுகான். அவருகக்கு மனமார்ந்த வரவேற்பும் வாழ்த்துக்களும். சமாஜ்வாதியும், கூட்டணிக் கட்சிகளும் ஒன்றிணைந்து, சமத்துவம் மற்றும் சமத்துவத்தின் இயக்கத்தை தீவிரமாக எடுத்துச் செல்வோம். இது எங்களின் கூட்டுத் தீர்மானம்’’ எனக் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவுடன் சுவாமி பிரசாத் மவுரியா

நேற்று மவுரியா பதவி விலகியுவுடன் இதேபோல் ட்வீட் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்