ஒமைக்ரான் பாதிப்பு | உலகம் முழுவதும் 115 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் ஒருவர் மரணம்: மத்திய சுகாதாரத்துறை தகவல்

By ஏஎன்ஐ

புதுடெல்லி: ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் இதுவரை மொத்தம் 115 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு மரணம் இந்தியாவில் பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் புதன்கிழமை தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இதில் 24 மணி நேரத்தில் 442 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டில் மொத்த கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 3,60,70,510. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,55,319. நாட்டில் கரோனா வைரஸால் தினசரி தொற்று விகிதம் 11.05 சதவீதமாக உள்ளது. செயலில் உள்ள கரோனா பாதிப்புகள் மொத்த நோய்த்தொற்று கண்டவர்களில் 2.65 சதவீதம் ஆகும்.

சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:

"உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, டெல்டாவை விட ஒமைக்ரான் கணிசமாக அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, யுகே, கனடா, டென்மார்க் ஆகியவற்றின் தரவு டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரானுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் இன்று கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,55,319 ஆக உள்ளது. கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வரும் கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் குஜராத் ஆகியவை முன்னணியில் உள்ளன.

அதிகரித்துள்ள பாஸிட்டிவ் விகிதங்களோடு கவலைக்குரிய மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 22.39 சதவிகிதம், மேற்கு வங்கம் 32.18 சதவிகிதம், டெல்லி 23.1 சதவிகிதம் மற்றும் உத்தரப் பிரதேசம் 4.47 சதவிகிதம் என்ற சமன்பாட்டில் உள்ளன.

ஐரோப்பாவில் எட்டு நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு மடங்குக்கும் மேல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 9ஆம் தேதி கோவிட்-19 நிலைமை குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன் பின்னர், லேசான மற்றும் மிதமாக பாதிப்படைந்தவர்களுக்கான டிஸ்சார்ஜ் கொள்கையை சுகாதார அமைச்சகம் திருத்தியுள்ளது. அதன்படி, பாஸிட்டிவ் சோதனை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குறைந்தது ஏழு நாட்கள் ஆன பிறகு லேசான பாதிப்பு உள்ளவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, எந்தவித அவசர அவசியமில்லாத நிலையில் சோதனைகள் எதுவும் தேவையில்லை''.

இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்