இந்தியாவின் ஜனநாயக மாண்பை நம் நாட்டு இளைஞர்கள் முன்னெடுத்து செல்கின்றனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருந்தார். கரோனா பரவல் காரணமாக நேரடி வருகை ரத்து செய்யப்பட வீடியோ கான்பரன்சிங் மூலமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முதல் நிகழ்ச்சியாக புதுச்சேரி 25வது தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காமராஜர் மணிமண்டபத்தையும் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவில் இரண்டு சக்திகள் உள்ளன. ஒன்று நமது மக்கள் தொகை என்றால், இன்னொன்று நமது இளைஞர்கள். இந்தியாவின் ஜனநாயக மாண்பை நம் நாட்டு இளைஞர்கள் முன்னெடுத்து செல்வதை காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளாக உள்ளனர்.
தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்கள் மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளனர். இந்தியா இன்றும் இளமையாக இருக்க காரணம், நாம் நவீனத்தை பேசுவது தான். நமது அன்றாட வாழ்வில் இந்தியாவின் வளமிக்க பாரம்பரியம் எதிரொலிக்கிறது. இந்தியாவை போன்று வேறு எந்த நாட்டிலும் இளைஞர்கள் சக்தி அதிகம் கிடையாது. இளைஞர் சக்தியால் மட்டுமே புதிய உலகை படைக்க முடியும் என்பது தெளிவாகிறது. கரோனா காலத்தில் ஏராளமான புதிய தொழில்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டன. அதேபோல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
» மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சக ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் அத்துமீறல்
» நாடு முழுவதும் 120 மாவட்டங்களில் 10% பாசிடிவிட்டி விகிதம்: நம்பிக்கை தரும் மும்பை நிலவரம்
கரோனாவை கட்டுப்படுத்த அதிகமான இளைஞர்கள் குறைவான காலத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும், தற்போது வரை 15 முதல் 18 வயதுள்ள சிறுவர்கள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களால் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்க முடியும் என்பதற்கு இது சான்று.
இந்திய இளைஞர்களால் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்க முடியும். இளைஞர்களின் திறமையை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை உருவாக்கியுள்ளது. அதேநேரம், பெண்கள் முன்னேற்றத்தையும் கருத்தில்கொண்டு அவர்களின் திருமண வயது 21 வயதாக அதிகரித்துளோம். இதுபோன்ற முயற்சிகளால் இளைஞர்களின் வளர்ச்சியானது ஒவ்வொரு நிலையிலும் கண்கூடாக பார்க்க முடிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago