புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் சில நிமிடங்களுக்கு முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், https://twitter.com/MIB_India என்ற ஹேண்டிலில் ட்விட்டரில் இயங்கிவருகிறது.
இந்நிலையில் இந்தப் பக்கம் இன்று (ஜன.12) சிறிது நேரம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்க் பெயரில் இயங்கியது. அதிலிருந்து கிரேட் ஜாப் (Great Job) என்று மட்டுமே அடுத்தடுத்து ட்வீட்கள் வந்தன.
ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் சதி வேலை செய்தது தெரியவந்தவுடனேயே துரிதமாக செயல்பட்ட அமைச்சகத்தின் தகவல், தொழில்நுட்பப் பிரிவு ட்விட்டர் பக்கத்தை மீட்டது.
» நாடு முழுவதும் 120 மாவட்டங்களில் 10% பாசிடிவிட்டி விகிதம்: நம்பிக்கை தரும் மும்பை நிலவரம்
» மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மீண்டும் கரோனா: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்
இருப்பினும், இந்திய தேசத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்கள் கையில் சிக்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் (டிசம்பர் 12 ஆம் தேதி) இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதில் ஹேக்கர்கள் கிரிப்டோ கரன்ஸி முதலீடு செய்யக் கோரி ட்வீட் செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் எலான் மாஸ்க் பெயரில் கிரேட் ஜாப் என ட்வீட் செய்யப்பட்டுள்ளது. எலான் மஸ்க் உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமாவார்.
இவருடைய் டெஸ்லா நிறுவனம் கிரிப்டோ கரன்ஸியான டோஜ் காயினில் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago