திருப்பதியில் இன்று முதல் உள்ளூர் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்

By என்.மகேஷ்குமார்

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேதிகளில் சுவாமியை தரிசிக்க ஏற்கெனவே ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் வெளியிட்டு, அவற்றை பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.

வரும் 13-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. அதன் பின்னர் காலை 8 மணி வரை விஐபி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர். அதன்பின் சாமானிய பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

உள்ளூர் பக்தர்களுக்கு இன்று 10-ம் தேதி காலை 9 மணி முதல் திருப்பதியில் மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் தினமும் 5 ஆயிரம் டோக்கன்கள் வீதம் 10 நாட்களுக்கு 50 ஆயிரம் இலவச டோக்கன் வழங்கப்பட உள்ளது.

அலிபிரி நடைபாதையில் 12-ம் தேதி நள்ளிரவு முதல் 22-ம் தேதி நள்ளிரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கடந்த நவம்பர் 18 முதல் டிசம்பர் 10 வரை முன்பதிவு செய்து, பலத்த மழை காரணமாக சுவாமியை தரிசிக்க முடியாதவர்கள் இம் மாதம் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தரிசனத்திற்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்