புதுடெல்லி : உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் கரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது.
5 மாநிலத் தேர்தல்களையும் எப்போது நடத்துவது, எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
» சண்டிகர் மேயர் தேர்தலில் திடீர் திருப்பம்; பாஜக வெற்றி: அதிக இடங்களை வென்ற ஆம் ஆத்மி தோல்வி
''உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளும், பஞ்சாப்பில் 117 தொகுதிகளும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளும், மணிப்பூரில் 60 தொகுதிகளும் கோவாவில் 40 தொகுதிகளும் உள்ளன.
உ.பி.யில் 7 கட்டத் தேர்தல்: தேதி என்ன?
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடக்கிறது. முதல் கட்டம் பிப்ரவரி 10-ம் தேதியும், 2-வது கட்டம் 14-ம் தேதியும், 3-வது கட்டம் 20-ம் தேதியும், 4-வது கட்டம் 23-ம் தேதியும், 5-வது கட்டத் தேர்தல் 27-ம் தேதியும் நடக்கிறது. மார்ச் 3-ம் தேதி 6-வது கட்டத் தேர்தலும், 7-ம் தேதி கடைசிக் கட்டத் தேர்தலும் நடக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவுக்கு வேட்புமனு வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. 21-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். 24-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 27-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசித் தேதியாகும்.
2-வது கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 21-ம் தேதி தொடங்குகிறது. 28-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். 29-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 31-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.
3-வது கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 25-ம் தேதி தொடங்குகிறது, பிப்ரவரி 1-ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்ய கடைசி நாள், 2-ம் தேதி வேட்புமனு மீது பரிசீலனையும், 4-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.
4-வது கட்டத் தேர்தலுக்கு வரும் 27-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 3-ம் தேதி வேட்பு மனுவுக்குக் கடைசி நாள், 4-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 7-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெறக் கடைசி நாளாகும்.
5-வது கட்டத் தேர்தலுக்கு பிப்ரவரி 1-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலுக்குக் கடைசி நாள் 8-ம் தேதியும், வேட்புமனு பரிசீலனை 9-ம் தேதியும், வாபஸ் பெற 11-ம் தேதியும் கடைசி நாளாகும். 14-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 16-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.
6-வது கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4-ம் தேதியும், கடைசி நாள் 11-ம் தேதியாகும். வேட்புமனு பரிசீலனை 16-ம் தேதியும், மனுவைத் திரும்பப் பெற 17-ம் தேதி கடைசி நாளாகும்.
7-வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தலுக்கு பிப்ரவரி 10-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, 17-ம் தேதி முடிகிறது. வேட்புமனு பரிசீலனை 18-ம் தேதியும், 21-ம் தேதி திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.
மணிப்பூர்
மணிப்பூரில் தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும், 2-வது கட்டம் மார்ச் 3-ம் தேதியும் நடக்கிறது.
3 மாநிலங்கள்
மற்ற 3 மாநிலங்களான உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் 21-ம் தேதி இந்த மாநிலங்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது, 28-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். 29-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 31-ம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.
அனைத்து மாநிலத் தேர்தலும் முடிந்தபின் மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது''.
இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago