இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு வந்த சார்ட்டர் விமானத்தில் இருந்த 125 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை கரோனா ஆபத்து இருக்கும் நாடுகளாக இந்தியா பட்டியலிட்டுள்ளது. எனவே, அந்த நாட்டில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இத்தாலியின் மிலன் நகரில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு 179 பயணிகளுடன் சார்ட்டர் விமானம் நேற்று வந்தது. அவர்களில் 19 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை தவிர மீதமுள்ள 160 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 125 பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE