புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,135 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,097 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இது நேற்றைவிட 55% அதிகமாகும்.
ஒமைக்ரான் பரவலைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் 653 பேருக்கும் டெல்லியில் 464 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 58,097.
» ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்: கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு; பள்ளி, கல்லூரிகள் மூடல்
» டெல்லியில் 24 மணிநேரத்தில் 5,481 பேருக்கு கரோனா தொற்று; மே மாதத்தை தொடும் பாதிப்பு விகிதம்
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,50,18,358.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 15,389.
இதுவரை குணமடைந்தோர்: 3,43,21,803.
தினசரி பாசிடிவிட்டி விகிதம் 4.18% என்றளவில் உள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 534 .
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,82,551.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,14,004.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 147.72 கோடி.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றால் டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago