புதுடெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரானிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,892 ஆகஅதிகரித்துள்ளது
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப்பின் தினசரி தொற்று 25 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த 24மணிநேரத்தில் கரோனாவில் 37ஆயிரத்து 379 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளன். இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 830 ஆக அதிகரி்த்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 82 ஆயிரத்து 17 ஆகஅதிகரித்துள்ளது.
இதற்கிடையே ஒமைக்ரானிலும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில்(568பேர்), டெல்லி(382), கேரளாவில் 185 ேபர், ராஜஸ்தானில் 174 பேர், குஜராத்தில் 152 பேர், தமிழகத்தி் 121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
» காய்கறி போஹா, பஜானி வடை, காஜர் கா அல்வா: ஆயுஷ் உணவு வகைகள் அறிமுகம்
» டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கரோனா தொற்று: சூப்பர் ஸ்பிரெட்டர் என பாஜக கிண்டல்
இதுவரை ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டோரில் 766 பேர் குணமடைந்தனர் தமிழகத்தில் 100 பேர் வரை குணமடைந்துள்ளனர். மகராஷ்டிராவில் 259 பேர் ஒமைக்ரானில் குணமடைந்துள்ளனர்.
பெரும்பாலான நகரங்களில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று 4,099 பேர் பாதிக்கப்பட்டனர், கடந்த 5 நாட்களில் 500 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் 8,082 பேர் பாதிக்கப்பட்டனர், ஆனால், 90 சதவீதம் பேர் அறிகுறியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் 1041 பேரும், கொல்கத்தாவில் 2,801 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புனேயில் 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago