தெலங்கானா சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் 8 பேர், நக்சல் ஒழிப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் இருந்து தெலங் கானாவின் கம்மம் மாவட்டம் வரையிலான வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதி கரித்திருப்பதாக நக்சல் ஒழிப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தெலங்கானா மாநில நக்சல் ஒழிப்பு படையினர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப் போது இரு மாநில எல்லைக்குட் பட்ட சாக்லர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த 30 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று அதிகாலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு நக்சல் ஒழிப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப் பட்டனர். அவர்களில் மாவோயிஸ்ட் தலைவர் ஹரி கிஷணும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பஸ்தர் சரக ஐஜி எஸ்.ஆர்.பி.கல்லூரி கூறும்போது, ‘‘5 பெண்கள் உட்பட 8 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். சண்டை நடந்த இடத்தில் இருந்து அவர்களின் சடலங்களுடன், ஏ.கே 47 ரக துப்பாக்கி, சிறிய ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளோம்’’ என்றார்.
பிரேத பரிசோதனைக்காக மாவோயிஸ்டுகளின் சடலங்கள் ஹெலிகாப்டர் மூலம் கம்மம் மாவட்டம் பத்ராச்சலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையில் உயிரிழந்த மாவோயிஸ்டுகள் அனைவரும் வடக்கு தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago