ஹரியானா: முஸ்லிம்களின் தொழுகை என்பது பலத்தைக் காட்டும் நிகழ்வாக இருக்கக் கூடாது என பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டார் கருத்து கூறியுள்ளார்.
குர்கானில் முஸ்லிகள் பொது இடங்களில் தொழுகை நடத்த சில இந்து அமைப்புகள் தொடர்ந்து இடையூறு செய்து வருவது சர்ச்சையாகியுள்ள நிலையில் முதல்வர் கட்டார் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.
முன்னதாக நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கட்டார் கூறியதாவது:
பொது இடங்களில் வழிபாடுகளை மேற்கொள்வது தவறு. நமாஸ் என்பது நமாஸாக மட்டுமே இருக்க வேண்டும். தொழுகை பலத்தைக் காட்டும் நிகழ்வாக மாறிவிடக் கூடாது. மக்கள் அனைவருக்கும் வழிபடவும், பிரார்த்தனை செய்யவும் உரிமை உண்டு. ஆனால், அவை குறிப்பிட்ட இடங்களில் தான் நடைபெற வேண்டும். அதில் ஏதாவது மாற்றுக் கருத்துகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் பேசி பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும். பட்டோடி பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவை சீர்குலைக்கும் வகையில் வலது சாரி இளைஞர்கள் நடந்த விதம் துரதிர்ஷ்டவசாமானது. அத்தகைய சம்பவங்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. எந்த ஒரு விழாவை தடுப்பது சரியல்ல.
» இதயங்களை வென்ற ரத்தன் டாடாவின் எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம்: வீடியோ இணைப்பு
» 'நான் பிரதமர் மோடியைப் பின்பற்றுகிறேன்': மாஸ்க் அணியாததற்கு காரணம் சொன்ன சிவசேனா எம்.பி.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து அவர் பேசுகையில், இதனை யார் தொடங்கினார்கள், யார் ஆதரித்தார்கள் என்பதை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை வேறு திசையில் தூண்டி விடுகின்றனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago