இதயங்களை வென்ற ரத்தன் டாடாவின் எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம்: வீடியோ இணைப்பு

By செய்திப்பிரிவு

தனது 84வது பிறந்தநாளை எந்த ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இல்லாமல் எளிமையாகக் கொண்டாடியுள்ளார் தொழிலதிபர் ரத்தன் டாடா.

அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இதயங்களை வென்று வருகிறது.

ரத்தன் டாடா எப்போதும் இணையவாசிகளின் இதயத்துக்கு நெருக்கமானவர். அவருடைய உளம்கனிந்த பதிவுகளாக இருக்கட்டும், இணையவாசிகளுடன் அவர் கலந்துரையாடும் பாந்தமாக இருக்கட்டும். ரத்தன் டாடா என்றும் நெட்டிசன்களின் மாஸ் ஹீரோ.

கடந்த 28 ஆம் தேதி அவர் தனது 84வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அது அவ்வளவு எளிமையான பிறந்தநாள். ஒரு கப் கேக் அதில் ஒரு மெழுகுவர்த்தி. கேக்கை வெட்ட பகட்டான கத்தியும் இல்லை, சுற்றி நின்று வாழ்த்துப் பாட கூட்டமும் இல்லை.

டாடா நிறுவன ஊழியரான ஓர் இளைஞரின் உதவியோடு கப் கேக்கில் சிறு வில்லையை உண்டு பிறந்தநாளை சிறந்த நாளாக மாற்றிக் கொண்டார் எளிமையின் நாயகராக அறியப்படும் ரத்தன் டாடா.

இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து இப்போது வரை 1 மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

வீடியோவில் ரத்தன் டாடாவுடன் பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர் சாந்தனு நாயுடு. இவர் கடந்த மூன்றாண்டுகளாக டாடா குழும சேர்மனான ரத்தன் டாடாவுடன் நெருங்கிய வட்டத்தில் இருக்கிறார். அதனால் தான் டாடா தனது பிறந்தநாளை சாந்தனுவுடன் கொண்டாட விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

தேசத்தின் மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடா எவ்வளவு எளிமையாக பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் என்பது இணையவாசிகளின் இதயத்தைக் கவர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்