புதுடெல்லி: நாகாலாந்தில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பிரச்னைக்குரிய பகுதிகள் என பட்டியலிடப்பட்டுள்ளவைகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் 1958 முதல் அமலில் உள்ளது. இதன்படி சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவோரை வாரன்ட் இன்றி கைது செய்யலாம். அனுமதியின்றி சோதனை செய்யலாம். துப்பாக்கிச் சூடு நடத்தலாம் போன்ற அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகிறது.
இந்தநிலையில் நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மோன் மாவட்டத்தையொட்டிய கிராமத்தில் நாகா தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர். இந்நேரத்தில் பணியில் இருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில் பொதுமக்கள் 6 பலியாகினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
» உ.பி. தேர்தலை உரிய நேரத்தில் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கை: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி
» மகாத்மா காந்தி பற்றி அவதூறு பேச்சு; காளிச்சரண் மகாராஜ் ம.பி.யில் கைது
வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் மீண்டும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மேலும் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் இந்த சட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம், டிசம்பர் 30, 2021 முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நாகாலாந்து முழுவதும் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘நாகாலாந்து மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய பகுதி மிகவும் குழப்பமான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. மக்களின் உதவிக்கு ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது அவசியம்’’ என தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago