இந்தியாவில் 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: அன்றாட கரோனா தொற்று 13,154; நேற்றைவிட 43% அதிகம்

By ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளது. 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. இதுவரை 320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை டெல்லியில் அதிகபட்சமாக 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 257, குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, கேரளாவில் 65 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,154 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்:13,154.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,48,22,040.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 7,486.

இதுவரை குணமடைந்தோர்: 3,42,58,778.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.40% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 268.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,80,860

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 82,402

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,43,83,22,742 கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்