ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் நடந்த 2 என்கவுன்ட்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்தநாக், குலாம் மாவட்டங்களில் நேற்று மாலை இச்சம்பவம் நடந்தது.
இது குறித்து போலீஸார் தரப்பில், நேற்று மாலை நவ்காம் அனந்தநாக் மாவட்டம், குல்காம் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை ஐஜி விஜய் குமார் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அடையாளம் தெரிந்தது. மற்ற இருவரின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது மிகப்பெரிய வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.
இந்த என்கவுன்ட்டரில் போலீஸார் சிலரும் காயமடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago