முஸ்லிம்களுக்கு அடுத்து கிறிஸ்தவர்களைக் குறிவைக்கும் இந்துத்துவா படை: ப.சிதம்பரம் தாக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "முஸ்லிம்களுக்குப் பின் இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் அன்னைத் தெரிஸாவின் மிஷனரி ஆப் சாரிட்டியின் அமைப்பின் வங்கிக்க கணக்குளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவ்வாறு எந்த கணக்கையும் முடக்கவில்லை, லைசன்ஸ் புதுப்பதில் மட்டும் சிக்கல் இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், "மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைளை பிரதான ஊடகங்கள் மறைத்துவிட்டது வேதனைக்குரியது, வெட்கப்பட வேண்டியது.

மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அங்கீகாரத்தை புதுப்பிக்கக் கோரும்போது, அதை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது என்பது இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் எளியவர்களுக்காக மகத்தான சேவை செய்துவரும் என்ஜிஓ-களுக்கு எதிரானத் தாக்குதல்.

மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி விவகாரத்தில், கிறிஸ்தவ தொண்டுப் பணிக்கு எதிராக பாகுபாட்டுடன், முன்முடிவுடன் மத்திய அ ரசு நடப்பது தெளிவாகிறது. முஸ்லிம்கள் முதலில் குறிவைக்கப்பட்டார்கள். இப்போது இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள்" என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்