‘‘பியூஷ் ஜெயின் வீட்டில் ரூ.284 கோடி பறிமுதல்; சமாஜ்வாடி கட்சியின் ஊழல் வாசனை’’- பிரதமர் மோடி சரமாரி தாக்கு

By செய்திப்பிரிவு

கான்பூர்: உ.பி.யில் பியூஷ் ஜெயின் வீட்டில் ரூ.284 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, உத்தர பிரதேசத்தில் 2017-ம் ஆண்டுக்கு முன்பு மாநிலம் முழுவதும் பரவிய ஊழல் வாசனை இதன் மூலம் மீண்டும் மக்கள் முன் வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் பியூஷ் ஜெயின். இவர் ஓடோகெம் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் வாசன திரவியங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கான்பூர், மும்பை, குஜராத், துபாய் உட்பட பல்வேறு நகரங்களில் அவருக்கு அலுவலகங்கள் உள்ளன.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான பியூஷ் ஜெயின், ஜிஎஸ்டி, வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் வருமான வரித் துறை அதிகாரிகள், ஜிஎஸ்டி புலனாய்வு துறை (டிஜிஜிஐ) அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

கன்னோஜில் உள்ள அவரது பூர்விக வீடு, கான்பூர் வீட்டில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கான்பூர் வீட்டில் ரூ.177 கோடி, கன்னோஜ் வீட்டில் ரூ.107 கோடி என இதுவரை ரூ.284 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 25 கிலோ தங்க நகைகளும் 250 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கான்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்ற கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் பியூஷ் ஜெயின் பெயரை குறிப்பிடாமல் இந்த விவகாரம் குறித்து பேசினார். இதுமட்டுமின்றி சமாஜ்வாதி கட்சியையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.

அவர் பேசுகையில் ‘‘சில நாட்களுக்கு முன் பணம் நிரம்பிய ப்ரீஃப்கேஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவும் எதிர்க்கட்சிகளின் வேலையா. இதற்கான பொறுப்பை அவர்கள் ஏற்பார்களா, இல்லையா. உத்தர பிரதேசத்தில் 2017-ம் ஆண்டுக்கு முன்பு மாநிலம் முழுவதும் பரவிய ஊழல் வாசனை இதன் மூலம் மீண்டும் மக்கள் முன் வந்துள்ளது’’ எனக் கூறினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்