கான்பூர்: கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்த ரயிலில் பயணம் செய்தார்.
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 9 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரயில் திட்டம் ஐஐடி கான்பூரிலிருந்து மோதி ஜீல் வரையிலானது. கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த நீளம் 32 கிலோ மீட்டர். இதில் 2 வழித்தடங்கள் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையில் செல்வதாகும். இது ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. முதல் வழித்தடத்தில் 21 ரயில் நிலையங்களும், இரண்டாவது வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்களும் உள்ளன.
இன்று தொடங்கி வைக்கப்பட்ட 9 கிலோ மீட்டர் நீள மெட்ரோ ரயில் திட்டம் கான்பூர் – மோதி ஜீல் இடையே 9 நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் உத்தரப்பிரதேச முதலமைச்சரால் 15.11.2019 அன்று தொடங்கப்பட்டன.
» ‘‘சவால்களை எதிர்கொண்டால் வேட்டையாடுபவராக மாறுவீர்கள்’’- பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
» கிடப்பில் மக்களின் புகார்கள்: சொந்த சம்பளம், உயரதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்திவைத்த ம.பி. கலெக்டர்
கோவிட்டின் இரண்டாவது அலை இருந்தபோதும் இதன் கட்டுமானப் பணிகள் அனைத்துத் தடைகளையும், சவால்களையும் கடந்து துரிதமாக நடைபெற்றன. கட்டுமானம், சமிக்ஞை முறை, ரயில் பாதை, மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டு, மின்சாரப் பாதைப் பணி போன்றவை இரண்டு ஆண்டு காலத்திற்குள்ளாகவே முடிக்கும் திறமையை உ.பி. எம்.ஆர்.சி. பெற்றிருந்தது.
பின்னர் கான்பூர் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார். அவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago