புதுடெல்லி: ஒரே நாளில் 2 கரோனா தடுப்பூசிகள் மற்றும் ஒரு ஆன்டி வைரஸ் மாத்திரைக்கு மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஎஸ்சிஓ) அனுமதி அளித்துள்ளது.
சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு தடுப்பூசிகளையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தடுப்பூசிகளையும் சில கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தலாம். அதாவது, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும், இந்த மருந்தின் பயன்பாடு, பக்க விளைவுகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தடுப்பூசிகளுக்கும் இறுதி ஒப்புதலை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விரைவில் வழங்கும் எனத் தெரிகிறது.
இந்த இரு தடுப்பூசிகளைத் தவிர்த்து மால்னுபிராவிர் எனும் ஆன்டி வைரஸ் மாத்திரைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்டி வைரஸ் மாத்திரைக்கு 10 நிறுவனங்கள் இதுவரை கிளினிக்கல் பரிசோதனையை முடித்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
» சண்டிகரில் ஆம் ஆத்மி எழுச்சிக்கு காரணங்களும், பஞ்சாப் நோக்கிய கேஜ்ரிவாலின் இலக்கும்!
» இரவில் ஊரடங்கு; பகலில் பேரணி, பிரச்சாரம்: உ.பி. அரசை சாடும் பாஜக எம்.பி. வருண் காந்தி
இந்த மாத்திரைகளை எடுப்பதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 30 சதவீதம் குறைக்கிறது, கரோனா சிகிச்சையிலும் சிறப்பாகச் செயல்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் வகையில், மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரே நாளில் 3 மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
கார்பிவேக்ஸ் தடுப்பூசி, கோவேவேக்ஸ் தடுப்பூசி, மற்றும் ஆன்டி வைரஸ் மாத்திரை மால்னுபிராவிர் மாத்திரைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்பிவேக்ஸ் தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஆர்பிடி புரோட்டின் வகை தடுப்பூசியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிதான் மக்களுக்குப் பரவலாகச் செலுத்தப்பட்டு வருகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசி புழக்கத்தில் இருந்தாலும் மிகக் குறைவாகவே செலுத்தப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago