கம்பத்தில் ஏற்றும்போது சோனியாவின் கரங்களில் கழன்று விழுந்த காங்கிரஸ் கொடி: வீடியோ இணைப்பு

By ஏஎன்ஐ

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு விழாவை ஒட்டி கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றும்போது அது கீழே விழுந்தது. இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 137-வதுஆண்டு விழா இன்று (டிசம்பர் 28) கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸுக்கு உண்டு.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை கட்சிக் கொடி ஏற்ற வருகை தந்தார் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி. நிகழ்விடத்தில் வெள்ளை நிற கதர் உடுப்பில், சட்டையில் கட்சிக் கொடி தாங்கி ஏராளமான தொண்டர்கள் கொடி வணக்கம் செலுத்த அணிவகுத்திருந்தனர்.

அப்போது, கட்சிக் கொடி திடீரென கழன்று இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் கரங்களில் விழுந்தது. இதனால் சோனியா காந்தி அதிர்ச்சியில் ஆழ்ந்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்