புதுடெல்லி: அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தநிலையில் அந்த குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியால் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கவில்லை என்றும் அந்த அமைப்பு தனது கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு கோரி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கடிதம் எழுதியதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘கிறிஸ்துமஸ் அன்று, மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது. அவர்களின் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருகின்றனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது’’ என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி வங்கியின் கணக்குகளை முடக்குமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கோரிக்கையை அனுப்பியதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்; ஒத்திவைக்கப்பட வாய்ப்பில்லை?
» டெல்லியில் 6 மாதங்களில் இல்லாத அளவு கரோனா தொற்று உயர்வு: மஞ்சள் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு
அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் FCRA 2010 மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2011 இன் கீழ் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் டிசம்பர் 25 அன்று நிராகரிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி வங்கியின் கணக்குகளை முடக்குமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கோரிக்கையை அனுப்பியதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தங்கள் விண்ணப்பத்தை புதுபிக்குமாறு கோரிக்கையோ அல்லது மறு விண்ணப்பமோ மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டியிடம் இருந்து பெறப்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
46 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago