புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மகேந்திர பிரசாதின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி.யும், தொழிலதிபருமான மகேந்திர பிரசாத், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 81 வயதான மகேந்திர பிரசாத், நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் நேற்று இரவு காலமானார்.
மகேந்திர பிரசாத் பிஹாரில் இருந்து ஏழு முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். மேலும் ஒரு முறை மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகேந்திர பிரசாத் மறைவு சமூகத்திற்கும் அரசியலுக்கும் பெரும் இழப்பு என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
» பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுடன் முறைப்படி கூட்டணிப் பேச்சை தொடங்கினார் அமரிந்தர் சிங்
மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மகேந்திர பிரசாதின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மகேந்திர பிரசாத் மறைவால் துயரடைந்துள்ளேன். நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகளாக அவர் பணியாற்றினார்.
பல்வேறு சமூகசேவை முயற்சிகளில் முன்நின்றார். பிஹார் மற்றும் அதன் மக்களின் நல்வாழ்விற்காக எப்போதும் அவர் பேசினார். அவரது குடும்பத்திற்கு இரங்கல்கள். ஒம் சாந்தி” என பிரதமர் மோடி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago