ஜன.1 முதல் கோவின் தளத்தில் 15 முதல்18 வயது பிரிவினர் பதிவிடலாம்: எவ்வாறு பதிவு செய்வது?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 15 வயது முதல் 18 வயதுள்ளவர்களுக்கு 2022 ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கும் நிலையில், ஜனவரி 1-ம் தேதி முதல் கோவின் தளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10-ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரி்க்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது என்று அறிவித்தார்.

இது குறித்து கோவின் தளத்தின் தலைவர் மருத்துவர் ஆர்எஸ் சர்மா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “2022 ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த வயதுள்ள பிரிவினர் ஜனவரி 1-ம் தேதி முதல் கோவின் தளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம். இதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வயதுள்ள பிரிவினர் ஆதார் கார்டு மூலம் பதிவு செய்யலாம். சிலரிடம் ஆதார் அட்டை இல்லாவிட்டால், பள்ளியில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்து முன்பதிவு செய்யலாம்” எனத் தெரிவித்தார்

15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்த கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருக்கிறது. ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தபோதிலும் இன்னும் நடைமுறைக்குவரவில்லை. 15 முதல் 18 வயதுள்ள பிரிவில் ஏறக்குறைய 7 முதல் 8 கோடி வரை தடுப்பூசி செலுத்துவார்கள் எனத் தெரிகிறது

எவ்வாறு கோவின் தளத்தில் பதிவு செய்வது? - வழிமுறை இதோ...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE