சண்டிகர்: சண்டிகரில் மாநகராட்சி தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைபற்றியுள்ளது.
பஞ்சாப் - ஹரியாணா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப் பட்டு வருகிறது.
இதில் மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது மாநகராட்சியை கையில் வைத்துள்ள பாஜக 10 வார்டுகளை மட்டுமே கைபற்றியது. காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 29 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாஜக சார்பில் தற்போது மேயராக உள்ள ரவி காந்த் சர்மா இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
» ஒமைக்ரான் அச்சுறுத்தல்: எந்தெந்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு?
» 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளிப்போகுமா?- தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
இதுபோலவே பாஜகவின் முன்னாள் மேயர்கள் ரவிகாந்த் சர்மா மற்றும் தாவேஷ் மௌத்கில் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். மௌத்கில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜஸ்பிர் சிங்கிடம் 939 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், ஷர்மா 888 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இருப்பினும் ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் சந்தர் முகி சர்மா தேர்தலில் தோல்வியடைந்தார். இதுவரை ஆம் ஆத்மி 1, 4,15, 17, 18,19, 21, 22, 23, 25, 26, 29 மற்றும் 31 ஆகிய வார்டு எண்களை வென்றுள்ளது, பாஜக 2, 3, 6, 7 ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த முறை நடந்த தேர்தலில் மொத்தமுள்ள, 26 வார்டுகளில், பா.ஜ., 20 இடங்களை கைப்பற்றியது; கூட்டணி கட்சி யான அகாலி தளம், ஓரிடத்தில் வென்றது. காங் கிரசுக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத் தன. சுயேச்சை ஓரிடத்தில் வென்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago