புதுடெல்லி:வேளாண் சட்டங்களை எந்த வடிவிலும் மீண்டும் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி உருவாக்கும் குழப்பத்தில் விவசாயிகள் யாரும் சிக்கிட வேண்டாம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதியளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், “ சில காரணங்களால் வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அடுத்துவரும் காலங்களில் முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியோ மத்திய அரசு திரும்பப்பெற்ற வேளாண் சட்டங்களை வேறுவடிவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிவித்ததது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என்று பிரதமர்மோடி உறுதியளித்து பின்னர் நாடாளுமன்றத்திலும் மசோதா தாக்கல் செய்து திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஆனால், மத்தியஅமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்தியஅமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதி்ல் கூறியதாவது:
நாட்டின் விவசாயிகளின் நலனைக்காக்கும் பொருட்டு வேளாண்சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். மத்திய அரசுக்கு வேளாண் சட்டங்களை திரும்பக் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளை மறைக்க எதிர்மறையான பிரச்சாரம் செய்து, விவசாயிகளைக் குழப்புகிறது. இந்த குழப்பத்தில் விவசாயிகள் சிக்க வேண்டாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மத்தியஅமைச்சர் நரேந்திர சிங் தோமர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்திலும் இதையே வலியுறுத்தியுள்ளார், அதில் “ மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பக் கொண்டுவரும் என்று ஒருபோதும் நான் கூறவில்லை. காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளை மறைக்க குழப்பத்தை உருவாக்குகிறது, விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago