கரோனாவுக்கு எதிரானப் போரில் தனிநபர் விழிப்புணர்வு, ஒழுக்கம் நமது நாட்டின் மிகப் பெரிய வலிமை: பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு


புதுடெல்லி : கரோனா வைரஸின் புதிய உருமாற்றத்துக்கு எதிரானப் போரில் தனிமனிதர்களின் விழிப்புணர்வும், ஒழுக்கமும் நாட்டின் மிகப்பெரிய வலிமை என மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம் அடைந்தார்.

பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி முதன்முதலில் 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றிக்கிழமை நடக்கும் இந்த நிகழ்ச்சி, 84-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முன்எப்போதும் இல்லாத மிகப்பெரிய தடத்தை எட்டியுள்ளது. ஆனால், கரோனா வைரஸின் புதிய உருமாற்றத்துக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

புதிய ஒமைக்ரான் வைரஸ் குறித்து நமது அறிவியல் வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய விவரங்களைப் பெற்று, பல்வேறு ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிநபர் ஒழுக்கம், விழிப்புணர்வு ஆகியவை கரோனாவுக்கு எதிரான போரில் நமது நாட்டின் மிகப்பெரிய வலிமையாக இருக்கிறது

நம்முடைய ஒட்டுமொத்த வலிமை கரோனாவைத் தோற்கடிக்கும். 2022ம் ஆண்டை நாம் மிகுந்த பொறுப்புடன் எதிர்கொள்வோம். புதிய வைரஸான ஒமைக்ரான் நமது கதவைத் தட்டிவிட்டது. இதை நாம் பொறுப்புடன் இருந்து தோற்கடிப்பது மிகவும் முக்கியமானது.

தமிழகத்தின் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் தன்னுடைய கடைசி மூச்சுஇருக்கும்வரை ோராடினார்.அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் சவுரியா சக்ராவிருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வந்தபோதிலும்கூட வருண் சிங் தனது பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதினார்.இதன மூலம் தன்னுடைய வேரை அவர் மறக்கவில்லை எனத் தெரிகிறது.

விரைவில் தேர்வுகள் வரவுள்ளன அதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் விரைவில் பரிக்ஸா பார் சர்ச்சார்வில் சேர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பாடங்களைப்பற்றி மாணவர்களுடன் நான் பரிக்ஸா பார் சர்ச்சாவில் உரையாடுவேன். இந்த ஆண்டும் தேர்வுகளுக்குமுன் மாணவர்களுடன் உரையாடுவேன். 9வது முதல்12ம் வகுப்புவரை மாணவர்களுக்கு ஆன்-லைனில் போட்டிகளும் நடத்தப்படும்.

புத்தகம் படிப்பதை நாம் பிரபலமாக்க வேண்டும். 2021ம் ஆண்டு என்ன மாதிரியான புத்தகம் படித்தீர்கள் என்பதை என்னுடன் பகிருங்கள். நீங்களும் பகிரும் தகவல்கள் 2022ம் ஆண்டு புத்தகம்படிக்க நினைப்பவர்களுக்கு அந்த புத்தகங்களைத் தேர்வு செய்துபடிக்க உதவியாக இருக்கும். பல்வேறு வகையான புத்தகங்களைப் படிப்பதில் பெருமை கொள்ளுங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்