பெங்களூரு :ஒமைக்ரான், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கர்நாடக மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி மாநில அரசு இன்றுஉத்தரவிட்டுள்ளது.வரும் 28ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுகாதார் இன்று தெரிவித்தார்.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 17 மாநிலங்களில், 422 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேரும், அதைத்தொடர்ந்து டெல்லியில் 79 பேரும் ஒமைக்ரானால் பாதி்க்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 41 பேரும், தமிழகத்தில்34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், குஜராத்தில் 43 பேரும், கேரளாவில் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் இதில் கர்நாடக மாநில அரசும் வரும் 28ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த 3 மாநிலங்களுமே பாஜக ஆளும் மாநிலங்களாகும்.
அடுத்து புத்தாண்டு வருவதால் அது தொடர்பாக கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது மக்கள் ஏராளமானோர் கூடும்போது, தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால்,முன்கூட்டியே இரவு நேர ஊரடங்கை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.
கர்நாடக சுகாதாரத்துறைஅமைச்சர் கே.சுகாதார் இன்றுபெங்களூருவில் அளித்த பேட்டியில் “ வரும் 28ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரங்கு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும். முதல்வர் பசவராஜ் பொம்மை, மூத்தஅமைச்சர்கள், தொழில்நுட்பக் குழுவினர்,கரோனா கட்டப்பாட்டுக் குழு ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த 10 நாட்களும் இரவில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது, விழாக்கள், நிகழ்ச்சிகள், கூட்டமாகக் கூடுதல் ஆகியவை முற்றிலும் கர்நாடகாவில் தடை செய்யப்படுகிறது. ரெஸ்டாரன்ட், ஹோட்டல்கள், பப், ஆகியவற்றில் 50 சதவீதம் பேர் அமரும் வகையில் இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago