புதுடெல்லி: ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை மக்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.இந்தியாவில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 415 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து 115 பேர் குணமடைந்துள்ளனதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. நாம் அனைவரும் 2022 ஆம் ஆண்டுக்காக தயாராகி கொண்டு இருக்கிறோம். தற்போது ஒமைக்ரான் பரவி வருகிறது.
» நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: அமித் ஷா வெளியிட்ட நல்லாட்சி குறியீடு
» 'ஒரே இந்தியா உன்னத இந்தியா' என்பதே நாட்டின் இன்றைய மந்திரம்: பிரதமர் மோடி
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியாவிலும் பலருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யபப்ட்டுள்ளது. ஒமைக்ரானை கண்டு பீதி அடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள். இந்தியாவில் 18 லட்சம் கரோனா படுக்கைகள் தயாராகி உள்ளன.இந்தியாவில் குழந்தைகளுக்கான 90,000 படுக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன, குறைந்த நேரத்தில் அதிகபட்ச தடுப்பூசி கவரேஜை நாடு எட்டியுள்ளது.
முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவதை மறந்துவிடக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டு. தடுப்பூசி செலுத்தும் திட்டம் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மாநிலங்களிடம் கூடுதலான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை சரியான முறையில் உள்ளது. நாட்டின் தடுப்பூசி வெற்றிக்கு நாட்டின் அறிவியல் சமூகத்திற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். விரைவில், நாசி தடுப்பூசி மற்றும் டிஎன்ஏ தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை மக்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்
15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago