புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை பாஜகவினர் இன்று நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி வாஜ்பாய்க்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள். அடல் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம். நாட்டுக்கு அவரின் உயரிய சேவையால் நாம் ஊக்கமடைந்துள்ளோம். வலுவானதாக மற்றும் வளர்ச்சியடைந்ததாக இந்தியாவை மாற்றுவதற்கு தமது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார்.
வளர்ச்சிக்கான அவரது முன்முயற்சிகள் கோடிக்கணக்கான இந்தியர்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தின’’ எனக் கூறியுள்ளார்.
» ஒமைக்ரான் பாதிப்பு: இந்தியாவில் எண்ணிக்கை 415 ஆக உயர்வு
» மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: ஒரே நாளில் 7,189 பேருக்கு பாதிப்பு
இதனிடையே வாஜ்பாயின் பிறந்த நாளான இன்று முதல் சிறு நன்கொடை திரட்டும் பணியை பாஜக மேற்கொண்டுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘பாஜகவுக்கு நான் ரூ.1,000 நன்கொடை வழங்கியுள்ளேன். எப்பொழுதும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற எங்களின் லட்சியமும், வாழ்நாள் முழுவதும் தன்னலமற்ற சேவை செய்யும் கலாச்சாரமும் உங்களின் சிறு நன்கொடையால் மேலும் வலுப்பெறும்.
பாஜகவை வலுப்படுத்த உதவுங்கள். இந்தியாவை வலிமையாக்க உதவுங்கள்’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago