தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

மின்சார வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணம் செலுத்துவதில் இருந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது.

பேட்டரிகள் இல்லாத மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவு தொடர்பான ஆலோசனையை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வழங்கியுள்ளது.

மாற்று எரிபொருள்களின் உமிழ்வு தரநிலைகள் தொடர்பான பல்வேறு விதிகள்/விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் வழங்கப்படும் சாலையோர வசதிகளின் ஒரு பகுதியாக சாலை உருவாக்க நிறுவனத்தால் மின்சார வாகன சார்ஜிங் நிலைய வசதிகள் வழங்கப்பட உள்ளன.

இதுபோன்ற 39 வசதிகளை ஏற்கனவே ஆணையம் வழங்கியுள்ளது மற்றும் 103 வசதிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கெனவே வழங்கப்பட்ட பணிகள் 2022-23 நிதியாண்டின் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்