குழந்தைகளுக்கு எதிரான சைபர் வன்முறையைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?- அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்

By செய்திப்பிரிவு

இணையதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கமளித்துள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

* தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-ன் 67பி பிரிவு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிடுவதற்கு அல்லது பார்ப்பதற்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

* தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகளின்படி, 2021 பயனர்களின் பாதுகாப்பிற்கு சமூக ஊடக தளங்களை பொறுப்பாக்குகிறது.

* இந்தியாவில் உள்ள இன்டர்போலுக்கான தேசிய முகமையான சிபிஐ மூலம் பெறப்பட்ட இன்டர்போல் பட்டியலின் அடிப்படையில், தீவிர குழந்தைகள் பாலியல் வன்கொடுமை காட்சிகள் அடங்கிய இணையதளங்களை அரசு அவ்வப்போது முடக்குகிறது.

* சிறுவர் சார்ந்த ஆபாசம் தொடர்பான அணுகலைத் தடுக்க இணைய சேவை வழங்குநர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* பாலியல் குற்றத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு-14 ஆபாச நோக்கங்களுக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கான தண்டனையை வழங்குகிறது.

இவ்வாறு அமைச்சர் பட்டியலிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்