புதுடெல்லி: கான்பூர் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி டிசம்பர் 28-ம் தேதி உரையாற்றுகிறார். பிரதமரின் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு மாணவர்கள், முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐஐடி கான்பூர் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை டிசம்பர 28-ம் தேதி அன்று உரையாற்றுகிறார். தமது உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஐஐடி கான்பூர், பிற ஐஐடி-க்களின் மாணவர்கள் மற்றும் உலகெங்கும் பரவியுள்ள ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களை மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவதற்காக இம்மாதம் 28-ம் தேதி கான்பூர் செல்வதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இதுவொரு வலிமையான நிறுவனம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் பங்களிப்பு வழங்குவதில் முன்னோடியாக உள்ள நிறுவனம்.
» இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 200க்கு மேல் அதிகரிப்பு: பிரதமர் மோடி நாளை ஆலோசனை
» குளிர்காலக் கூட்டத்தொடர் முடிந்தது: இரு அவைகளும் ஒருநாள் முன்பாக ஒத்திவைப்பு
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அனைவருக்கும் நான் அழைப்பு விடுகிறேன்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago