புதுடெல்லி: லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொலையில் தொடர்புடையவராகக் கூறப்படும் மத்திய உள்துறை இணைஅமைச்சர் அஜெய் குமார் மிஸ்ரா, சாஸ்த்ர சீமா பால் படை (எஸ்எஸ்பி) நிகழ்ச்சியில் விருந்தினராகப் பங்கேற்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் நீக்கப்பட்டார்.எந்தவிதமான காரணமும் கூறப்படாமல் கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக அவர் துறையின் சக அமைச்சர் நிஷித் பிரமாணிக் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார்.
லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் என 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அஜெய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மத்திய அமைச்சர்அஜெய் குமார் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த வாரம் ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அதில், மத்திய அமைச்சர் மிஸ்ராவிடம், ஒரு பத்திரகையாளர் லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அளித்த அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப் பத்திரிகையாளரை கடுமையான வார்த்தைகளால் மத்திய அமைச்சர் மிஸ்ரா திட்டும் காட்சி இருந்தது.
இந்நிலையில், தெற்கு டெல்லியில் உள்ள ஹித்ரோனி பகுதியில் மத்திய ரிசர்வ் படையின் ஒரு பிரிவான சாஸ்த்ர சீமா பால் பிரிவு தொடங்கப்பட்டு 58-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜெய் மிஸ்ரா சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.ஆனால், கடைசி நேரத்தில் அஜெய் மிஸ்ராவுக்குப் பதிலாக நிஷித் பிரமாணிக் அழைக்கப்பட்டார்.
இது குறித்து சாஸ்த்ர சீமா படைப் பிரிவு தரப்பில் கூறுகையில் “அதிகாரபூர்வ சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா அழைக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரம் முழுவதும் முக்கிய அலுவல் பணிகளைக் கவனிக்க நேர்ந்ததால், அலுவலகத்திலேயே அஜெய் மிஸ்ரா இருந்ததால், பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்த்துவிட்டார். அதே வேலைப்பளு காரணமாக இதிலும் பங்கேற்காமல் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
44 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago