குஜராத்தில் உள்ள கக்ரபர் அணு மின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டதால் அவசரகால நடவடிக்கையாக ஒரு யூனிட் மூடப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை இந்தக் கசிவு ஏற்பட்டது, ஆனால் அதிகாரிகளோ, “கசிவினால் அணுக் கதிர்வீச்சு ஏற்படவில்லை” என்று கூறுகின்றனர்.
இது குறித்து அணு மின் நிலையத்தின் இயக்குநர் லலித் குமார் அறிக்கை ஒன்றில், “முதன்மை வெப்ப மாற்று அமைப்பில் சிறிய அளவில் கசிவு ஏற்பட்டது. எனவே இதன் வடிவமைப்பு விதிமுறைகளின் படி ஒரு அணு உலை மூடப்பட்டது. அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் செயலில் உள்ளன. கதிர்வீச்சு அளவு அணு மின் நிலையத்தில் உள்ளேயும் வெளியேயும் இயல்பான அளவிலேயே உள்ளது.
கக்ரபர் அணு மின்சக்தி நிலையத்தின் யூனிட் 1 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மூடப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
தெற்கு குஜராத்தில் உள்ள இந்த அணு மின் உற்பத்தி நிலையத்தில் 2 யூனிட்கள் செயலில் உள்ளன. முதல் அணு உலை 1992-ம் ஆண்டு செப்டம்பரில் நிர்மாணிக்கப்பட்டது. இதில் 1993 மே முதல் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2-வது அணு உலை 1995 ஜனவரியில் நிர்மாணம் செய்யப்பட்டு செப்டம்பர் 1995-ல் வணிகத்துக்கான உற்பத்தி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
44 mins ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago