புதுடெல்லி : ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா வி கான்டேவாலாவை நிரந்திர நீதிபதியாக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்ய முடியாது என முடிவு எடுத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்துக் குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில், “குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளைக் கழற்றாமல் அவரின் உடலை சீண்டியுள்ளார். எனவே இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது. உடல்ரீதியான தொடர்பு இல்லாததால் போக்சோ சட்டத்தின் கீழ் கருதப்படாது” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டப் பிரிவையும் ரத்து செய்தது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், தேசிய மகளிர் ஆணையம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக முறையிட்டனர்.
இதனையடுத்து இந்த வழக்கிலிருந்து குற்றவாளியை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவிந்திர பாட், பேலா எம் திரிவேதி தலைமையிலான அமர்வில் அளித்த தீர்ப்பில், “பாலியல் வன்கொடுமைகள் நடக்கக் காரணமாக இருப்பதே பாலியல் நோக்கம்தான். குழந்தையின் உடலோடு, உடல் உரசுவது அல்ல.
ஆதலால், விடுவிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் அடுத்த 4 வாரங்ளுக்குள் சரணடைய வேண்டும். போக்சோ நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை, 5 ஆண்டு கடும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தனர்.
போக்சோ வழக்கில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி கான்டேவாலா மாவட்ட நீதிபதியாக தரம் இறக்கி கொலிஜியம் பரிந்துரைத்தது. இவர் தனது பதவிக் காலம் முடியும்வரை அதாவது 2022 பிப்ரவரி வரை மாவட்ட நீதிபதியாக இருப்பார்.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யுயு லலித், ஏஏம் கான்வில்கர் ஆகியோர் கொண்ட கொலிஜியம் அமர்வு இந்த முடிவை எடுத்துள்ளது. அடுமட்டுமல்லாமல் நீதிபதி கான்டேவாலாவுக்கு 2 ஆண்டுகள் பதவிக் காலம் நீட்டிப்பு கடந்த ஆண்டு செய்யப்பட்டிருந்தது. அதை ஓராண்டாகவும் கொலிஜியம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago