தந்தைக்கு பதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மகன்

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் முத்சாபுரம் கிராம வருவாய் அதிகாரி எம். ஜான். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தேறினால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும்.

இவர் பல முறை 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியுற்றார். இந்த ஆண்டு தற்போது நடைபெறும் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இவரால் பதவி உயர்வு பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் பட்டதாரியான தன் மகனை, தனக்குப் பதில் தேர்வு எழுதும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி தற்போது நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு தேர்வில் எம். ஜானுக்கு பதிலாக அவரது மகன் தேர்வு எழுதி வந்தார்.

இதனிடையே நேற்று காலை தனது தந்தைக்கு பதிலாக மகன் தேர்வு எழுதினார். இதில் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர் இது குறித்து தன்னுடைய மேல் அதி காரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தந்தைக்கு பதில் தேர்வு எழுதிய மகனை பறக்கும் படையின் பிடித்து அவரது தேர்வை ரத்து செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்