காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை தேசியவாத காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சித் தலைவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுமைக்கும் காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பி.க்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். அந்தத் தடையை நீக்கக் கோரி காங்கிரஸ் கடுமையாகப் போராடி வருகிறது.
இந்நிலையில் சோனியா காந்தி இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் பேச வலியுறுத்தியுள்ளனர்.
» கரீனா கபூர் உள்பட 12 பாலிவுட் பிரபலங்களுக்கு கரோனா: கரண் ஜோஹர் பார்ட்டியால் பரவியதா?
» 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அடுத்த 6 மாதங்களில் கரோனா தடுப்பூசி: பூனாவாலா
ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படாதது இருகட்சிகளுக்கும் இடையேயான பூசலை மேலும் வலுப்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி வந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சோனியாவை மட்டும் பார்க்காமல் சென்றார். அப்போது அவர் அளித்தப் பேட்டியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற கட்சியே இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
41 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago