இந்தியா

இந்தத் திட்டத்துக்கு நாங்கள்தான் அடிக்கல் நாட்டினோம் என்று சிலர் வருவார்கள்.. பிரதமர் மோடி கிண்டல் பேச்சு

செய்திப்பிரிவு

சரயு கால்வாய் தேசியத் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர், இந்தத் திட்டத்துக்கு நாங்கள்தான் அடிக்கல் நாட்டினோம் என்று சிலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் இதை ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். சிலர் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நாங்கள் செயல்வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கிண்டலாகப் பேசினார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்ராம்பூரில், சரயு கால்வாய் தேசியத் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், "இந்தத் திட்டத்தின் பணிகள் தொடங்கிய போது, அதன் செலவு மதிப்பீடு வெறும் ரூ.100 கோடிதான். இன்று சுமார் ரூ.10 ஆயிரம் கோடிகளைச் செலவழித்து அது நிறைவேற்றப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளில் சரயு கால்வாய் திட்டத்தில் செய்ததை விட ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் அதிகப் பணிகளை நாங்கள் செய்துள்ளோம். இது இரட்டை இன்ஜின் அரசின் வேகமான பணி. திட்டத்தைக் குறித்த காலத்திற்குள் முடிப்பதே எங்களது முன்னுரிமை.

சரயு கால்வாய் தேசியத் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர், இந்தத் திட்டத்துக்கு நாங்கள்தான் அடிக்கல் நாட்டினோம் என்று சிலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் இதை ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். சிலர் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நாங்கள் செயல்வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்" என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 5 நதிகளை இணைக்கும் நீர்பாசன திட்டப்ப பணிகள் 1978 ல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை காரணமாக, இத்திட்டம் தாமதமாகி, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.

2016 ஆம் ஆண்டு, பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தியதன் விளைவாக, வெறும் நான்கு ஆண்டுகளிலேயே இத்திட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT