ஹரியானாவின் குருகிராம் நகரில் பொது இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த இந்துத்துவாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக ஆளும் ஹரியானாவின் முதல்வரான மனோகர்லால் கட்டார், பொது இடங்களில் தொழுகை ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியை ஒட்டியுள்ள தொழில் நகரமாக வளர்ந்திருப்பது குருகிராம். இங்கு பணியாற்றும் பல்வேறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் பல வருடங்களாக தம் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழிகையை பொதுவெளியில் நடத்தி வருகின்றனர்.
குருகிராமில் போதுமான மசூதிகளும் இல்லாமையால் அவர்களுக்கு அதன் மாநகராட்சியால் 126 இடங்களில் தொழுகைக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு இந்துத்துவா அமைப்புகளால் தொடரும் எதிர்ப்பால் அவ்விடங்கள் 18 என்றானது.
இதன் பிறகு இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகையையும் நடத்த விடாமல் 20க்கும் மேற்பட்ட சிறிய இந்துத்துவா அமைப்பினர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் பாஜகவின் ஹரியானா முதல்வர் மனோகர்லாலிடம் இன்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு முதல்வர் மனோகர்லால் கட்டர் அளித்த பதிலில், ‘குருகிராமின் காவல் மற்றும் அரசு நிர்வாகத்தின் ஆணையர்களுக்கு இப்பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளேன்.
இதில், தனது இடங்களில் ஒருவர் பூஜை, தொழுகை என மதச்சடங்குகள் செய்தால் பிரச்சனையில்லை. ஆனால், பொது இடங்களில் தொழுகை உள்ளிட்ட எந்த மதசடங்குகளும் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படாது.
இப்பிரச்சனையில் இரண்டு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை பலமுறை நடந்து வந்துள்ளது. இதில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் வஃக்பு வாரியம் நிலங்களை அவர்களுக்காகக் காலி செய்து அளிப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
அதுவரையும் முஸ்லிம்கள் தங்கள் சொந்த இடங்களில் தொழுகை நடத்துவது நல்லது. இவர்கள் பொதுவெளியில் நடத்துவதால மற்ற மதங்களுடன் நிகழும் மோதலை மதக்கலவரம் வரும் ஆபத்துக்கள் உள்ளன.
இதை தடுக்க மீண்டும் புதிதாகப் பேச்சுவார்த்தை துவக்கி தீர்வு காணப்படும். இதன்மூலம், எந்த தரப்பினருக்கும் பாதிப்பில்லாமல் உரிய வசதிகள் செய்து தர முயற்சிக்கப்படுகிறது.’ எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago