ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்: ராணுவம்

By ஏஎன்ஐ

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக நேற்று காலை ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.

இந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் பலியாகினர். விபத்தில் வருண் சிங் என்ற வீரர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தோரின் உடல் மரபணு பரிசோதனை மூலம் சோதிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உயிரிழந்தோரின் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவத் தரப்பில், விபத்தின் தீவிரத்தால் அவற்றின் அடையாளத்தை காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடல்களை அடையாளம் காண்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறோம். டெல்லியில் உறவினர்கள் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டால் அடையாளம் காண அறிவியல் முறைகள் பயன்படுத்தப்படும். உடல்களின் அடையாளம் காணப்பட்ட பின்னரே அது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்