நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் விபத்து குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர் மனைவியுடன் பயணம் செய்தாகக் கூறப்படும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவசர ஆலாசனை நடத்தினார்.
வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தெரிகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை 12.20 மணியளவில் வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கிழே விழுந்து நொறுங்கியது. 4 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை யார் யார் இறந்துள்ளனர் எனஅடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. குன்னூர் மலைப்பகுதியில் காட்டேரி என்ற இடத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சருடன் ஆலோசனை நடத்திவருகிறார். விபத்து குறித்து ராஜ்நாத் சிங் பிரதமரிடம் விளக்கமளித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago